தாளவாடி அருகே ஊருக்கு வெளியில் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி

 

தாளவாடி அருகே ஊருக்கு வெளியில் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி. வாகனம் பறிமுதல்.

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஒங்கனபுரம் கிராமப்பகுதியில் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஊருக்கு வெளியில் கர்நாடக பதிவு எண் கொண்ட டாட்டா ஏசி வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.

 

அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த வாகனத்தை கைப்பற்றி வருவாய் துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்தனர். அந்த வாகனம் யாருடையது? எங்கிருந்து ரேசன் அரிசி எடுத்து வரப்பட்டது?குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.