தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு முற்றுகை போராட்டம்


திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழில்நுட்ப பிரிவுக்கு சமீபத்தில் ஆர்.ஆர்.பி எனச் சொல்லப்படுகின்ற இரயில்வே ரெக்கியூர்மெண்ட் போர்ட்டால் கிரேட் 3 பணிக்கு பணியமர்த்தப்பட்ட 587 பணியிடங்களில் வெறும் 15 பேர் தான்  தமிழர் மீதமுள்ள 572 பேர் வட இந்தியர்.


தமிழர்களை வஞ்சிக்கும் நோக்குடன் பணியமர்த்தப்பட்ட வட இந்தியர்களின் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நடுவண் அரசு மற்றும் மாநில அரசு பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களையே பணியிலமர்த்து. குசராத், கர்நாடகம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களை போல மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராயல் ராஜாதலைமையில் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.