தாளவாடி அருகே ஓசூர் சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

தாளவாடி அருகே ஓசூர் சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

 


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழக கர்நாடக எல்லையில்  உள்ள ஒசூர் சாலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டி செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.