மானூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சுத்தமல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்  விழா

மானூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சுத்தமல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்  விழா கொண்டாட்டம்

 


 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுத்தமல்லி விலக்கில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து வியாபாரிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னம்மாள், ஒன்றிய செயலாளர் முத்துகுமார், விவசாய அணி ஒன்றிய தலைவர் செல்வ லட்சுமணன், விவசாய அணி மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சுந்தர சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாரியப்பன்,  சங்கன்திரடு தலைவர் மகா கணேஷ், பழவூர் ஊராட்சி தலைவர் அருணாச்சலம், நிர்வாகிகள் முருகன் மெடிக்கல் மாரிச்செல்வம், ரோகினி டெய்லர்  நடராஜன், சங்கன்திரடு தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.