திருச்செந்தூரில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள அம்பர் கீரிஸ் வாசனை திரவியம் பறிமுதல்


திருச்செந்தூரில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள அம்பர் கீரிஸ் எனப்படும் திமிலங்கத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் திருச்செந்தூர் நகரப்பகுதிகளில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திருச்செந்தூர் தாலுகா ஆபீஸ் ரோடு, அழகர் லாட்ஜ் முன்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வந்த  ETIOS என்ற நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர்.



அப்போது அந்த வாகனத்தில் வந்த பன்னீர்செல்வம், தஞ்சாவூர் மாவட்டம், பாளையபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் இளங்கோவன் (52),  அருப்புகோட்டை வாமபுரம், செங்குளத்தைச் சேர்ந்த ராமசந்திரன் மகன் ராம்குமார் (27), ஜெகபர் சாதீக் மகன் முஹம்மது அஸ்லம் (33), நாகப்பட்டணம் ஆலியூர், வடக்கு தெரு  இதயத்துல்லா மகன் ராஜா (எ) ராஜா முஹம்மது (34), திருச்சி  அரியமங்கலம் திருமகல் தெரு குமார் மகன் வெங்கடேஷ் (48), தஞ்சாவூர் மாவட்டம் யாகப்ப நகர் 4வது குறுக்கு நர்மதை தெரு ஆரோக்கியம் மகன் ஜான்பிரிட்டோ (48), ஆகியோர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் அரசால் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினமான திமிலங்கத்தின் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர், சுமார் 2 கிலோ எடையுள்ள 2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் (Ambererisi) என்ற பொருளை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி கணக்கில் மதிப்படையது என்பதும் விசாரனையில் தெரியவந்தது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆகியோர்களிடம் தகவல் தெரிவித்தனர், அவர்களின் உத்தரவின் பேரில் அவர்கள் 6 பேரையும் பிடித்த காவல்துறையினர் கடல்வாழ் உரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு  பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர் கீரிஸ் மற்றும் 6 பேர், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

Previous Post Next Post