தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார்.!


தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு தொடக்க விழா  தூத்துக்குடி வஉசி கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு தபால் தலை மற்றும் அஞ்சல் அட்டை  டிஎம்பி மொபைல் டிஜிபி வாகனம் ஆரோக்கிய இந்தியா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் டிஎன்பிஎல் நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்பின் மகளிர் சுய உதவி  குழுவினருக்கும் வியாபாரிகளுக்கும் தொழில் தொடங்குவதற்காக கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

டிஎம்பி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கேவி ராமமூர்த்தி, டிஎம்பி வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் நடராஜன் ஐபிஒஎஸ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தனித்துவமிக்க டிஎன்பி தபால் தலை மற்றும் புதிய அஞ்சல் அட்டையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனைகளை பணம் எடுத்தல் பணம் செலுத்துதல் வங்கி கணக்கு புத்தகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளை அவர்களுடைய வசிப்பிடங்களை நேரடியாக பெற உதவும் வகையில் டிஎம்பி மொபைல் டிஜிலாபி வாகனத்தையும் மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைத்தார் 

இதன் பின்னர் வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் டிஎம்பி மற்றும் டைம்ஸ் நெட்வொர்க் இணைந்து மேற்கொள்ளும் நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனத்தையும் நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார் 

இறுதியாக விழாவில் மருத்துவம் மற்றும் சுகாதார துறை நிறுவனங்களுக்கு கடன் உதவிகளை மத்திய அமைச்சர் வழங்கினார்

நூற்றாண்டு விழாவில் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கே.வி இராமமூர்த்தி பேசுகையில் 

டிஎம்பி கடந்த 99 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து பங்குதாரர்களுக்கும் எப்போதும் உரிய மதிப்பு அளித்து வந்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளான தேசவிடுதலை எமர்ஜென்சி பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அன்மையில் உருவான பெரும்பாலான கோவில் உள்ளிட்ட பல்வேறு சோதனையான காலகட்டங்களில் வங்கி வெற்றிகரமாக சந்தித்து வந்துள்ளது 

வாடிக்கையாளர்கள் கோவில் 19  பெருந்தொற்றை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு உதவும் விதமாக இன்றைய தேதி வரை 13,753 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1567.62 கோடி நிதியை வழங்கியுள்ளது 

டிஜிட்டல் பிரக்கிங் யுகத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் நோக்கத்துடன், பணம் மற்றும் கரன்சி நோட்டுகளை கையாளுதல், அடுக்கி கட்டுதல், உள்ளிட்ட பணிகளுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகும்.

எங்களது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஒட்டி சிறந்த டிஎம்பி தபால் தலை மற்றும் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீட்டு நிகழ்வு தொடங்கிய நாங்கள் பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளோம். இதையடுத்து டிஎம்பி மொபைல் டிஜிலாபி அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 

மேலும் பொது மக்களுக்கு உதவும் வகையில் நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மருத்துவம் மற்றும் சுகாதார துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிதி உதவிகளை வழங்குவது எங்களது ஒரு வருட தொடர் முயற்சிகளின் முதன்மையானதாக இருக்கும் என்றார் 

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட 509 கிளைகளை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை கொண்டுள்ளது

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக பணம் மற்றும் பணம் கையாளுதல் பிரிவில் தென்னிந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி டிஎம்பி கடந்த 2020ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2021 ஆம் நிதியாண்டு வங்கியின் நிகர லாபம் ரூபாய் 408 கோடியிலிருந்து ரூபாய் 603 கோடியாக 48 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது

மொத்த முன்வைப்பு தொகை கடந்த 2020 நிதி ஆண்டில் ரூ.28,236 கோடியிலிருந்து 2021 ஆம் நிதியாண்டில் ரூ 31,541 கோடியாக உயர்ந்துள்ளது 

மொத்த முதலீடு கடந்த ஆண்டில் ரூ.36,825 கோடியிலிருந்து நடப்பாண்டில் ரூ.40,970 கோடியாக உயர்ந்துள்ளது 

மொத்த வர்த்தகம் கடந்த 2020 ஆம் நிதியாண்டில் ரூ.65,061 ஒரு கோடியிலிருந்து 11 சதவீதம் உயர்ந்து நடப்பாண்டில் ரூ.72,511 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்

முன்னதாக வஉசி கல்லூரி வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். பின்னர்  அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்துவைத்து ஒவ்வொரு அரங்கத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விளக்கங்களை கேட்டிருந்தார். 

விழாவில் வங்கியின் முன்னாள் டைரக்டர் சிஎஸ் ராஜேந்திரன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் வங்கி சேர்மன் அண்ணாமலை உதவி சேர்மன் சிதம்பரநாதன், பொது மேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, துணை பொது மேலாளர் அசோக் குமார், மற்றும் எம்ஆர் காந்தி எம்எல்ஏ, வஉசி கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு,  நாடார் சங்க தலைவர்கள் கரிக்கோல்ராஜ், என்ஆர் தனபாலன், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன், பாரதியை  ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பால்ராஜ், பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஆர் கனகராஜ், மான்சிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்