சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல்.! - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட 3 பேர் கைது.!


தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்துவதற்கு உதவியாக இருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 480 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் மணிமாறன், தலைமை காவலர் மாடசாமி, முதல் நிலை காவலர் பரசுராமன், காவலர் பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (13.01.2022)  மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 69 BY 3756 என்ற எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோத விற்பனைக்காக அதிக அளவிலான மது பாட்டில்களை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆட்டோவில் வந்த செந்தில்வேல் (49), த/பெ. திருக்கண்ணன், சிவன் கோயில் பின்புறம், நாகலாபுரம் மற்றும் ராகுல் (22), த/பெ. சவுந்தரபாண்டி, வன்னிகுளம் காலனி, நாகலாபுரம் இருவரையும் கைது செய்து செய்து அவர்களிடமிருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் செங்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் தனிநபருக்கு நிர்ணயித்த அளவை விட அதிக அளவு மது பாட்டில்களை விற்பனை செய்து சட்டவிரோத மது விற்பனைக்கு உதவியாக இருந்தது அந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் கோமகுருநாதன் (47),  த/பெ. பட்டைமணி, பள்ளிவாசல் பட்டி தெரு, நாகலாபுரம் என்பதும் தெரிய வந்தது உடனே மேற்படி போலீசார் டாஸ்மாக் மேற்பார்வையாளரான கோமகுருநாதன் என்பவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post Next Post