சத்தியமங்கலம் வாரச்சந்தை பகுதியை வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது அது மக்களை பெரிதும் பாதிக்கும் - சந்தை வியாபாரிகள் ஆட்சேபனை மனு.


சத்தியமங்கலத்தில் தற்போது செயல் பட்டு வரும் வாரச்சந்தை, இந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.இந்த வாரச் சந்தையில் உள்ளூம்,புறமாக சுமார் 500 சிறு வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர சந்தையில் இட நெருக்கடியில் வியாபாரம் செய்து வருகிறோம்.

நாங்கள் அனைவரும் மிகச் சிறு வியாபாரிகள். சந்தை வியாபாரத்தையேவாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள்.எங்களுக்கு சந்தை வியாபாரத்தைத் தவிர, வேறு வாழ்வாதாரம் ஏதுமில்லை. குறிப்பாக கொரோனா முடக்க காலத்தில்,

வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், 1999ஆம் ஆண்டு வாக்கில்,வேறு இடத்தில் செயல்பட்டு வந்த சத்தியமங்கலம் தினசரி காய்கறி சந்தை, வார சந்தையில் ஒரு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது.

அப்போது முதல் நாங்கள் பெரும் இட நெருக்கடிக்கு உள்ளானோம்.தற்போது தினசரி சந்தையை நவீன படுத்துவதற்காக வாரசந்தை செயல்பட்டுவரும் இடத்திலிருந்து, மேலும் இடத்தை ஒதுக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தினசரி சந்தை செயல்பட்டுவரும் பகுதியை,மேம்பாட்டு பணிகள் முடியும் வரை வாரச் சந்தை செயல்படும் இடத்துக்கு மாற்று வதாகவும், அதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் அறிந்தோம். 

எனவே நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் வாரச் சந்தையை மாற்று இடத்திற்கு மாற்றாமல்,வாரச் சந்தையில் வியாபாரம் செய்து பிழைக்கும் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கா வண்ணம் வாரச்சந்தை தற்போது இயங்கும் இடத்திலேயே தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமென, சந்தை வியாபாரிகள் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் அவர்களுக்கும் மனு அளித்தனர்.

நாராயணசாமி செய்தியாளர்

Previous Post Next Post