தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் விருது.!

 

2021 சட்டசபை தேர்தலை சிறப்பாக நடத்திய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,  ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் விருது. ஜன.25ம் தேதி புதுடில்லியில் நடக்கும் தேசிய வாக்காளர் தின விழாவில் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்தாண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடந்தது. இத்தேர்தலை ஜிஐஎஸ் தொழில்நுட் பத்தின் உதவியுடன். நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டசபை தொகுதிகளிலுள்ள 1,924 வாக்குச் சாவடிகளும் முறையாக கண்காணிக்கப்பட்டது. வாக்காளர் கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் வரை அனைவரும் பயன்பெ றும் வகையில், "வாக்குச் சாவடி வழிகாட்டி” என்ற இணையதள அமைப்பை நெல்லை மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியிருந்தனர். இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய வழிகளை தெளிவாக பார்த்து தெரிந்து கொண்டனர்.

மேலும் 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத்தையும் இந்த இணையதளம் வழியாகவே எளிதாக அறிந்தனர். இந்த புதிய அமைப்பானது வாக்காளர்களுக்கு மட்டுமின்றி தேர்தல் பார்வையாளர் களுக்கும், நுண் பார்வை யாளர்களுக்கும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கும் இந்த "வாக்குச் சாவடி வழிகாட்டி" மிகவும் உபயோகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தை கண் காணிக்கும் விதமாக "தேர்தல் சமூக ஊட கங்களை கண்காணிக்கும்' அமைப்பு" என்ற புதிய இணையதள அமைப்பின் மூலம் கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. அவதூறு பேச்சு. பொய் பிரச்சாரம், தேர்தல் செலவுகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதி மீறல் போன்ற தேர்தல் சம்பந்தபட்ட அனைத்து விதி முறைகளும் கடுமையாக கண்காணிக்கப்பட்டன.

இத்தேர்தலில் கணினி தொழில்நுட்பத்திலுள்ள புதிய கண்டுபிடிப்புகளை தேர்தலுக்காக முன்மாதிரியாக கையாண்டதை பாராட்டும் விதமாக நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஷ்ணுவுக்கு இந் திய தேர்தல் ஆணையம் விருது வழங்க உள்ளது.

இதேபோல் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வாக்காளர் விழிப் புணர்வு பணிகளில் 2020-21ம் ஆண்டில் சிறப் பாக செயல்பட்டமைக்கான தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு செய் யப்பட்டுள்ளார். தேசிய வாக்காளர் தினமான. நாளை 25ம் தேதியன்று புதுடில்லியில் நடக்கும் விழாவில் இந்திய தேர்தல் ஆணையம் இந்த விருதினை வழங்கி பாராட்ட உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post