"சல்யூட் வைக்கவில்லை" : அரசு மருத்துவமனையில் நடந்த சர்ச்சை - அரசு மருத்துவர் - காவலர் பரஸ்புரம் புகார் - குமுறலில் காவலர்கள்.... முழு விசாரணை நடத்த கோரிக்கை.!

கோவில்பட்டி கிளைச்சிறையில் உள்ள 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த 3 பேரும் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 பேருக்கும் காவலர்கள் கனகராஜ், ஜெகன், ராஜேந்திரகுமார் ஆகியோர் இன்று பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனா.;. அப்போது அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சீனிவாசகன் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பரிசோதனை செய்துள்ளார். அவர் பரிசோதனை முடித்து வரும் போது தான் ஒருவர் மருத்துவர் தனக்கு ஏன் மரியாதை தரவில்லை என்று பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டள்ளது. இதையெடுத்து மருத்துவர் சீனிவாசகன் 3 காவலர்கள் மீதும், காவலர் கனகராஜ் அரசு மருத்துவர் சீனிவாசகன் மீது புகார் அளித்துள்ளனர். இருவரின் புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மருத்துவர் சீனிவாசகன் அளித்துள்ள புகாரில் தான் வார்டுக்குள் சென்ற போது 3 போலீசாரும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு வாட்ஸ் அப் பார்த்து கொண்டு இருந்ததாகவும், உள்ளே வரும் போதும். திரும்ப வரும் போது நான் யார் என்று கேட்கவில்லை என்றும், அவர்கள் காவல் பணி செய்யவில்லை என்றும், தன்னை காவலர்கள் ஒருமையில் மரியாதை குறைவாக பேசியதாகவும், நாங்கள் நினைத்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துவிடுவோம் என்று கூறியதாகவும், நீ எப்படி டாக்டர் என்று எங்களுக்கு எப்படி தெரியும் என்று நாகரீகம் இல்லமால் வார்டில் மிக கடினமாக கத்தியதாகவும், வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் முன்பு பேசியதால் தனக்கு அவமானமகவும், அசிங்கமாகவும் போய் விட்டதாகவும் எனவே 3 காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காவலர் கனகராஜ் கொடுத்துள்ள புகாரில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த போது சிவில் உடையில் வந்த ஒருவர் திடீரென எங்கள் 3 பேரையும் பார்த்து சேரில் இருந்து எழுந்து மரியாதை தர முடியாத என்று சொல்லி கொண்டே அசிங்கமான வார்த்தையில் திட்டினார். அதற்கு நீங்கள் யார் என்று கேட்க, 10வகுப்பு படித்து விட்டு அரசு வேலைக்கு வந்த உங்களுக்கு ஒரு டாக்டர் எப்படி என்று தெரியும் என்று சொன்னதாகவும், மருத்துவருக்கான எந்த உடை மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை, சிவில் உடையில் இருந்த காரணத்தினால் நீங்கள் டாக்டர் என்று தெரியவில்லை என்றோம், ஆனால் அவர் நீங்கள் போலீஸ் வேலை பார்த்து கீழிச்சீங்க, உங்க வேலையை தொலைத்து உங்களை ஊரை விட்டு ஓட வைக்கிறோம் என்று கூறினார். பொது மக்கள், நோயாளிகள் முன்னிலையில் அவர் பேசியது எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இருவரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளதால் காவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும் காவல் துறையினர் தரப்பில் கேட்ட போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். சிவில் உடையில் இருந்த காரணத்தினால் மருத்துவர் என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து முழு விசாரணை நடத்தாமல் காவல் துறையை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவரிடம் புகார் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் போலீசார் இடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளாக தெரிவித்துள்ளனர். 

தங்கள் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை தருவதுதான் காவல் துறையின் விதியே தவிர டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர் என ஒவ்வொருத்தருக்கும் எழுந்து நின்று காவலர்கள் சல்யூட் அடிக்க எந்த விதி உள்ளது,? ஆகவே ஆணவத்துடன் நடந்து கொண்டது  அந்த மருத்துவரா, காவலர்களா என்பது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post