குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - மூன்று அருவிகளில் குளிக்க தடை.!

தென்காசி மற்றும் குற்றால பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  இன்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் குளித்து கொண்டிந்தவர்கள் மீது சிறு சிறு கற்கள், மரக்கட்டைகள்  விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில்  பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய மூன்று அருவிகளிலும் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.  தண்ணீர் வரத்து குறைந்த உடன் மீண்டும் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கபடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாரல் மலையோடு நிலவும் இதமான சீசனை சுற்றுலா பயணிகள் அனுபவித்தாலும் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post