ஆசிய அளவில் 7 நாடுகள் கலந்துகொண்ட ஓபன் ஆசியா 2022 பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்.!


தமிழகத்தில் முதல் முறையாக, ராமநாதபுரத்தில், ஆசிய அளவில் 7 நாடுகள் கலந்துகொண்ட ஓபன் ஆசியா 2022 பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. 

ராமநாதபுரம் ஆக 15. 

தமிழகத்தில் முதல் முறையாக, ராமநாதபுரத்தில்,  ஓபன் ஆசியா 2022 பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை,  சவுதி அரேபியா, துபாய், மலேசியா  உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்தும், இந்தியாவிலிருந்து கேரளா மகாராஷ்டிரா ஆந்திரா உத்தர பிரதேஷ் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் என சுமார் 150 வீரர்கள் பங்கேற்றனர். 

WBPF, IFF மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப் பட்டது.  இதில் ஜூனியர் 2 பிரிவுகளிலும், சீனியர் 6 பிரிவுகளிலும், 40 வயதுக்கு மேல், 50 வயதிற்கு மேல் என இரு பிரிவுகளாகவும்,  ஆண்கள், பெண்கள் என இப்போட்டிகள் நடைபெற்றது. 

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கன்னியாகுமரியைச் சேர்ந்த அங்கிஸ் பிரசாத் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைகையை தட்டிச்சென்றார். இரண்டாவது பரிசை தேனியைச் சேர்ந்த குப்பமுத்து ரூபாய் 10 ஆயிரம் பெற்று அசத்தினர். 

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 15 ஆயிரம், 10 ஆயிரம் என மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அம்சமாக சவுதி அரேபியா சேர்ந்த செய்யது அகமது டர்கிம் 80 கிலோ பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்று அசத்தினார். 

இந்நிகழ்வில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் செயலாளர் ஜெகநாதன், இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் பொருளாளர் தனசேகரன், ராமநாதபுரம் மாவட்ட IFF செயலாளர் ஷைன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் உலக பாடி பில்டிங் பெடரேஷன் தலைவர் சீனி சிக்கந்தர் பாஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 

இளைஞர்கள் தற்போது உள்ள நிலையில் மது போதைக்கு அடிமையாகி தங்களது உடலை கெடுத்து வருகின்றனர், அவர்கள் மீண்டும் நல்ல முறையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் கேட்டுக் கொண்டார். 

தமிழகத்திலேயே முதல் முறையாக ஆசியா ஓபன் ஆணழகன் போட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது எனவும், இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Previous Post Next Post