தூத்துக்குடி மாவட்டம் - குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினருடன் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை.!

 

தூத்துக்குடி  மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினருடன் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும், விசாரணையில் உள்ள வழக்குகளில்  சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்தும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல்புரியும் காவல் ஆளினர்களுடன் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12,000/- அபராதம் பெற்று தர நீதிமன்ற அலுவலில் சிறப்பாக பணியாற்றிய ஆத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பொன் முத்துமாரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேணியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல்புரியும் காவல்துறை ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post