கெட்டிச்செவியூர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா

கோபி, ஜூன். 7


கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய் தி யா ளர் க ளி ட ம் கூறியதாவது, 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் தகுதி தேர்வில் 82,372 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க முடியாது. தற்போது எல்.கே. ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட் டுள் ள னர். ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் பணி நியமனம் செய்ய வாய்ப்பு இருக்கும். தற்போது உள்ள முறையில் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுபவர்கள் உடனடியாக பணி நியமனம் செய்யப்படு கின்றனர். நிகழ்ச்சியில் ஆவின் பால் தலைவர் கே.கே. காளியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.