நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டால் திமுக தனிமைப் படுத்தப்படும்

நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டால் திமுக தனிமைப்

படுத்தப்படும் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி:-

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- மறைந்த சுஷ்மா சுவராஜுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி செல்கிறேன். சுஷ்மா சுவராஜ் எனக்கு வழிகாட்டியாக இருந்து உள்ளார். பா.ஜ.க.வில் உள்ள ஒவ்வொரு பெண் நிர்வாகிக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். வழிகாட்டும் தலைவரை இழந்துவிட்டோம். மேகதாதுவில்  அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தடை விதித்து அனுமதி மறுத்து உள்ளது. ஒரு நதி நீரை 2 மாநிலங்களும் வஞ்சிக்கப்படாது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்த போது உறுதியளித்தார். தமிழகத்தை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று பொய்யான பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் சொல்லி வந்தன. தமிழகத்திற்கு பா.ஜ.க. பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று சொன்னேன். அது நிருபிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கப்படவில்லை என்பதை ஜெயலலிதா கேட்டதன் முலம் அவரது தொலைநோக்கு பார்வை வெளிப்பட்டு உள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கின்றன. காஷ்மீர் விவகாரத்தை நாட்டின் ஒற்றுமையாக பார்க்க வேண்டும். திமுக தனிமைப்படுத்தப்படும். நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் கூட திமுகவை ஆதரிக்காது. பா.ஜ.க.வின் கொள்கையில் எதிராக உள்ள ஆம் ஆத்மி உள்பட கட்சிகள் காஷ்மீர் சீரமைப்பை வரவேற்று உள்ளன. காஷ்மீர் மக்களும் மற்ற மாநில மக்கள் போல் உரிமைகளை பெற்று வாழ்வார்கள்.  கலைஞர் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post