கோபியை கலக்கும் போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கே.கிருஷ்ணகுமார். இவர் 25.5.1988 அன்று காவலராக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை கா கதிர்வேல் அவர்கள் மொழிப்போர் தியாகி ஆவார்.கே.கிருஷ்ணகுமார் கடந்த 31 வருடங்களாக காவல்துறையில் சிறு தண்டனைகள் கூட பெறாமல் பணி செய்து வருகிறார்.உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் 1998 முதல் 2013 வரை 16 வருடங்கள் கியூ பிரான்ச் சிஐடி பிரிவில் பணி செய்துள்ளார். இலங்கை தமிழர்களின் நடமாட்டத்தையும்,எல்டி டி இ விடுதலைப்புலிகள் ஆறு நபர்களை கைது செய்தும்,வெடிமருந்துகள் ,கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்தவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தும், தமிழ் தீவிரவாத அமைப்புகள், காட்டிலுள்ள இருந்த வீரப்பனின் கூட்டாளிகளை கைது செய்ய உதவியாக பணி செய்துள்ளார். போக்குவரத்து பிரிவில் பணி செய்யும்போது பொதுமக்களுக்கு சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் ஈரோடு மேம்பாலங்கள் பணியின்போது கடுமையான போக்குவரத்து ஏற்படும்போது மிகுந்த சிரமத்துடன் பணி செய்தும், கேரளாவிலிருந்து லாரி ஒன்றை கடத்திவரும் போது பிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தற்காக  ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் 2 முறை நற்பணி சான்று பெற்றுள்ளார். மேலும் காவல் துறை சார்பாக சுமார் 80 ரிவார்ட்ஸ் வாங்கியுள்ளார்.


மேலும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள லல்லபி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் 73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கே. கிருஷ்ணகுமார் சிறப்பு ஆய்வாளர் தேசியக் கொடியை ஏற்றினார். குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இவரது பணி சிறக்க தமிழ் அஞ்சல் நாளிதழ் வாழ்த்துகிறது.


Previous Post Next Post