மதுரை அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம்


மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிபெருந்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலையில் அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சே‌ஷ, யானை, போன்ற வாகனங்களில் கள்ளழகர் என்ற சுந்தரராசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று இரவு குதிரை வாகனத்தில் சுவமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி பிரமோற்சவ தேரோட்ட திருவிழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதிகாலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேரின் நான்கு பக்கங்களிலிருந்து கொடியசைத்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற கோ‌ஷம் முழங்க காலை 8 மணிக்கு வடம்பிடித்து இழுத்தனர்.முன்னதாக கோவில்யானை சுந்தரவள்ளிதாயார் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் முன்னே செல்ல தேரோட்டம் நடந்தது. இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் இன்று (16-ந்தேதி) தீர்த்தவாரியும் நடக்கிறது. நாளை (17 ந்-தேதி) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை தக்கார் வெங்கடா சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண் காணிப்பாளர்கள், திருக் கோவில்பணியாளர்கள் செய்திருந்தனர். தேரோட்ட திருவிழாவிற் காக மதுரை, தேனி, திண்டுக்கள், சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட் டங்கள், உள்ளூர் பக்தர்கள் வசதிக்காக மேலூர், வாடிப்பட்டி, மாட்டுத்தாவணி, பெரி யார்பஸ்நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.பாதுகாப்பு பணியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.