பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 73ஆம் சுதந்திர தின விழா

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 73ஆம் சுதந்திர தினத்தை பழனி அடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது. தேசிய கோடி ஏற்றி அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு  இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பழனி முன்னாள் நகர்மன்ற  தலைவர் ராஜமாணிக்கம் தலைமை ஏற்று நடத்தினார். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கந்தசாமி, நகர்குழு உறுப்பினர் சௌந்திரராஜன், பாலகிருஷ்ணன், ராஜா உட்பட ஏராளமான கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.