திருப்பூர் 265 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம்   மாவட்ட ஆட்சியர்  கே.எஸ்.பழனிசாமி தகவல் 


திருப்பூர்  ஈட்டிவீரம்பாளையத்தில் சுதந்திர தின விழா  கிராம சபைக்கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே.எஸ். பழனிசாமி   தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டி, சமுதாய நலக்கூட வளாகத்தில்  சுதந்திரதினத்தை முன்னிட்டு  நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் திருப்பூர்  வடக்கு சட்டமன்ற உறுப்பினர்   கே.என்.விஜயகுமார் . முன்னிலையில்  மாவட்ட ஆட்சித்தலைவடர் கே.எஸ்.பழனிசாமி  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவார்  பேசும்போது தெரிவிக்கையில்,
கிராம பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஜனவாp- 26 குடியரசு தினம் மே-1 உழைப்பாளா; தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர  -2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் மற்றும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.   மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.  இதன் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிடுதல் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் கருத்துருக்கள் பகிர்ந்து கொள்ளுதலே ஆகும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன. இது போன்ற கிராமசபை கூட்டத்தில் திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தை தடைவிதித்தல் வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள  ஏதுவாக இருக்கும். அதே போல் வீடு இல்லாதவரகளை கண்டறிந்து பசுமை வீடுத்திட்டத்தில் வீடுகட்ட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.  இந்நிகழ்வின் போது,  திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார்  உதவி இயக்குநர்  (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்   வெங்கடேஷ், அவிநாசி வட்டாட்சியர்  வாணி ஜெகதாம்பாள், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  கனகராஜ்,  மகுடீஸ்வரி  உட்பட அரசு  அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.