அரசியல் நாகரீகம் இன்றி என் தந்தையை விமர்சித்த முதல்வருக்கு மனது உறுத்தும்: கார்த்தி சிதம்பரம் பேட்டி

அரசியல் நாகரீகம் இன்றி என் தந்தையை விமர்சித்த முதல்வருக்கு மனது உறுத்தும் என்று திண்டுக்கலில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குடகனாறு விருந்தினர் இல்லத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- 17 ஆவது பாராளுமன்ற தொடர் முடிந்து உள்ளது இந்த தொடரில் பாஜக விற்கு 400க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இருப்பதால் எந்த ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை உள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் பார்லிமென்ட் கமிட்டிக்கு அனுப்பி அந்த சட்டத்தில் குறை நிறைகளை விவாதித்து திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர்தான் பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு கொண்டு வந்து பிறகு நிறைவேற்ற வேண்டும். ஆனால் பாராளுமன்ற குழு அமைக்காமல் ஆன்லைன் மூலம் இரவு 10 மணிக்கு ஒரு திட்டத்தைப் பற்றி முடிவு செய்கிறார்கள் இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை பாஜக கேட்பதில்லை RTI சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை இன்று முழுக்க முழுக்க பாஜக சிதைத்து விட்டது. முன்பு RTI அதிகாரிகள் தனிமையாக செயல்பட்டனர் ஆனால் இன்று அரசுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். முன்பெல்லாம் ஒரு அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லப்பட்டு வந்தது ஆனால் தற்போது அந்த சட்டத்தை மாற்றி ஒரு தனி நபரைக் கூட தீவிரவாதி என முடிவு செய்து விடுகின்றனர். முன்பு தீவிரவாதி என்று நீதிமன்றம் தான் முடிவு செய்யும் ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக உள்ளது. நிறைய தீவிரவாதிகள் சமூக ஆர்வலராக ஊடுருவியுள்ளனர் என பாஜக குற்றம் சாட்டுகிறது. இதனால் தனிநபர் சுதந்திரமும் மாநிலத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழ் மக்கள் 5% மட்டுமே உள்ளோம் ஆனால் 12 சதவீத டாக்டர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது பாஜக கொண்டுவந்துள்ள புதிய மருத்துவ கொள்கையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் 12 ஆண்டுகளுக்கு அல்லது 14 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும். இதை காங்கிரஸ் கம்யூனிஸ்ட், திமுக மட்டும்தான் எதிர்க்கிறோம்.  மற்ற கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் பாஜகவிற்கு துணைபோகிறது காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை இந்திய சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு ஆளுநர் முதலமைச்சர் உள்ள மாநிலத்தை மக்களின் கருத்தைக் கேட்காமலே முடிவு செய்து இருக்கின்றனர். 500 அரசியல் தலைவர்கள் இன்னும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளனர். ஏழு நாட்கள் ஆகியும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை. இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் சொல்லவில்லை முழுக்க முழுக்க சர்வாதிகார போக்கில் பாஜக செல்கிறது. இதை எதிர்க்க காங்கிரசைத் தவிர மற்ற எந்த கட்சியும் இல்லை. காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை போல மற்ற மாநிலங்களுக்கு எந்த நேரத்திலும் நடக்கும்.

 சிதம்பரம் பற்றி முதலமைச்சர் சொல்ல கூடிய வாசகமா அது, அரசியல் நாகரீகம் மா, 9 முறை நிதி அமைச்சாராக இருந்தார் பட்ஜெட் தாக்கல் செய்து ஆசியாவிலேயே சிறந்தவராக பார்க்கப்பட்டவர் சிதம்பரம், ஆனால் சரித்திர விபத்தால் முதல்வர் ஆனவர் இப்பிடி பேசலாமா, இப்பிடி பேச தகுதி இல்லை, தெய்வபக்தி உள்ளவராக இருந்தால் இப்படி பேசியதற்காக எடப்பாடி பழனிச்சாமி மனதில் நிச்சயம் உறுத்தும். காஷ்மீரில் இன்று மையப் பிரச்சனை என்ன என்பதை தெரியாமல் விமர்சனம் வைத்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக வைகோ விமர்சனங்களில் மாற்றம் உள்ளது இருபத்தி ஓராம் நூற்றாண்டில் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது. இன்று அவர்கள் பக்ரீத் கொண்டார்களா என யாருக்காவது தெரியுமா தமிழகத்தில் அதிமுக தலைவரையும், திமுக தலைவரையும் தீபாவளி சமயத்தில் கைது செய்துவிட்டு தீபாவளி கொண்டாட்டம் என்ற ஏற்றுக்கொள்வார்களா காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. பாஜக சொல்வது போல அமைதியான முறையில் காஷ்மீர் இருப்பதாக இருந்தால் அங்கு சிறையில் வைக்கப்பட்டுள்ள 500 பேரையும் விடுவித்து விட வேண்டியதுதானே ஏன் அவ்வாறு இன்னும் செய்ய பாஜக மறுக்கிறது. அரசியல் சாசனத்தை ஏமாற்றி அதிபர் முறையில் தேர்தல் என்று கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது ஹிந்தி பேசுபவர்களை தவிர மற்றவர்களுக்கு ஆபத்தானது. இதற்கு முதல் அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் அனைத்து விஷயங்களிலும் அதிமுக பாஜக விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மூன்று மொழிக்கொள்கை என்றாலே அது ஹிந்தி திணிப்பு தான் இந்திய அரசியல் சாசனத்திற்கு இந்திய பன்முகத் தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து இது 370 ஆவது பிரிவில் காரணமாகத்தான் காஷ்மீர் வளரவில்லை என்றால் சிசு மரணம் குறைவு வீடு இல்லாத மக்கள் இல்லை வேலை இல்லாமல் யாரும் இல்லை குஜராத்தை விட காஷ்மீர் பல அளவுகோல்களில்  முன்னிலையில் உள்ளது. ரஜினிகாந்த் எனது இனிய நண்பர் தான் அவருடைய கருத்து மிகவும் வருத்தமளிக்கிறது காஷ்மீரின் சரித்திரத்தை புரிந்து கொள்ளாமல் அங்கு இருக்கும் நிலையை புரிந்து கொள்ளாமல் பாஜகவிற்கு ஆதரவளிப்பது வருத்தமளிக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவதாகவும் கூறியிருக்கிறார். அவர் இந்த பிரச்சினையை மட்டுமல்லாமல் அனைத்து பிரச்சினைகளிலும் கருத்து சொல்லவேண்டும் நீட் முல்லைப்பெரியாறு காவிரி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் கருத்து சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் தமிழ்நாட்டிற்கு தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் கருத்துச் சொல்லவேண்டும் புராணத்தை படித்து அர்ஜுனன் கிருஷ்ணன் என்று அவர் கூறியிருக்கிறார் அவர் முதலில் காஷ்மீர் சரித்திரத்தையும் படிக்க வேண்டும் எல்லாத்தையும்விட ஜெர்மன் சரித்திரத்தை அவர் கண்டிப்பாக படிக்க வேண்டும் lebensraum  என்ற ஜெர்மன் வார்த்தையில் உள்ளது அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று படித்து காஷ்மீர் எந்த சூழ்நிலையில் இந்தியாவுடன் சேர்ந்தது என்பதை படித்துவிட்டு கருத்து சொல்லவேண்டும் ரஜினியின் கருத்தை முழுமையாக நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது தமிழகத்தில் நடப்பது சரித்திர விபத்தால் இருக்கக்கூடிய ஆட்சி எனத் தெரிவித்தார்.

 

Previous Post Next Post