ஆட்சி மாற்றமே அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

ஆட்சியை சரி செய்வதற்கான முயற்சியினால் எந்த பலனும் இல்லை:- தமிழகத்தில் ஆட்சி மாற்றமே அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு விழா ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் எந்த பலனும் இல்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வருவது தான். இந்த ஆட்சியில் தப்பித்தவறி ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் சொன்னாலும் அவர்களது அமைச்சர்கள் எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சொல்லும் மோசமான நிலையில் உள்ளது. ஆகவே இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வருவது தான் என்றார்.