சேலம் அரிசிபாளையம் தேவாங்கர் திருமண மண்டபத்திற்கு நிர்வாகிகள் தேர்வு

சேலம் அரிசிபாளையதில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜெயகோபால் செட்டி, செட்டிதனக்காரர்கள், மற்றும் பெரியதனக்காரர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயகோபால் செட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்: தேவாங்கர் திருமண மண்டபத்திற்கு தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் 13.8.19 அன்று முடிவடைகிறது. மேற்படி நிர்வாகிகளை மகாசபை மூலம் தேர்வு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.