நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் சமூக நலத்துறை சார்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை  வழங்கும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் சமூக நலத்துறை சார்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் சமூக நலத்துறை சார்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை  வழங்கும் நிகழ்ச்சி அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்.பி.நாயர் தலைமை வகித்தார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட சமூக நல அலுவலர் செ.உமையாள், அ.தி.மு.க கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் பழையாறு கே.எம்.நற்குணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.