பவானிசாகரில் மக்கள் நீதி மையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம்

பவானிசாகரில் மக்கள் நீதி மையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரங்கசமுத்திரம் 27 வது வார்டில்  மக்கள் நீதி மையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து புது உறுப்பினர்கள்  சேர்க்கையும் நடைபெற்றது.