பஸ் நிறுத்தத்தில் பஸ் நிக்காமல் சென்றதால் இறங்க படியில் நின்ற மாணவர் தவறி விழுந்து படுகாயம்
பஸ் நிறுத்தத்தில் பஸ் நிக்காமல் சென்றதால் இறங்க படியில் நின்ற மாணவர் தவறி விழுந்து படுகாயம் 

 


 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா கொம்மனை புதூர் சந்திரசேகரின் மகன் யுகேஷ், ஈரோடு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு விடுமுறைக்காக கல்லூரி முடிந்து ஈரோடு ஜி.ஹெச் அருகில் தனியார் எம்.பி டி.என்.47 ஏ.இ.9969 ஈரோட்டில் லிருந்து கரூர் வரை செல்லும் பஸ்ஸில் ஏறி கொம்பனை புதூர் எனக் கேட்டு கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குகியுள்ளார். இரவு நேரத்தில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது கொம்பனை புதூர் பஸ் ஸ்டாப் வந்து விட்டது நிறுத்துங்கள் என கண்டக்டரிடம் கேட்க பஸ் நிற்காமல் தாமரை பாளையம் வரை செல்ல முயன்றது.

 


 

மகனை அழைத்து செல்ல  நின்றிருந்தா அப்பா சந்திரசேகரன் பஸ் நிற்காமல் செல்வதை  தொடர்ந்து பஸ்ஸிக் பின்புறம் சென்றுள்ளார். பஸ்ஸிக்குள் இருந்த யுகேஷ் பஸ்ஸை நிறுத்தங்கள் ஸ்டாப்பிங்கில் ஏன் நிறுத்தவில்லை எனக்கேட்க அங்கு நிற்காது என கண்டக்டர் கூற பஸ் வேகமாக சென்றுள்ளது. தேன் பண்ணை கோசாக்காட்டூர் ரோட்டில் இருந்த வேகத்தடையில் பஸ் மெதுவாக செல்லும் போது யுகேஷ் இறங்க முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய யுகேஸ் படுகாயம் அடைந்துள்ளார்.அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்துள்ளனர். பின்பு தனது ஊரில் சென்று நடந்த விஷயத்தை ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார். அந்த தனியார் பஸ்ஸை பொதுமக்கள் முற்றுகை யிட்டனர். இனிமேல் பஸ் ஸ்டாப்பில் நிறுத்த வேண்டும் எனவும், வேகமாக செல்ல கூடாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.