திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ.88 லட்சம் மதிப்பில் வடிகால், சிறுபாலம், பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள்

திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ.88 லட்சம் மதிப்பில் வடிகால், சிறுபாலம், பள்ளிக் கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். 

 


 

திருப்பூர் தெற்கு தொகுதியில் நல்லூர், மன்னரை உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.88 லட்சம் மதிப்பில், சிறுபாலம், மழைநீர் வடிகால், பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். 

திருப்பூர் மாநகராட்சி 38 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகர், 1, 2வது வீதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பில்  மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைக்கும் பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் உதவி ஆணையர் சபியுல்லா, அர்பன் பாங்க் தலைவர் சடையப்பன், சக்திவேல்  உள்பட பலர் பங்கேற்றனர். இதே போல திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக் குட்பட்ட மண்ணறையில் உள்ள மாநகரட்சி பள்ளியில் ரூ.17.60 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளையும் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர். இதே வார்டில் உள்ள வாய்க்கால் மேட்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய கழிப்பிடத்தை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து சேர்மன் கந்தசாமி நகரில் ரூ.6 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் அமைத்து தண்ணீர் வசதி செய்யும் குழாய்களை  எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் உதவி ஆணையர் சபியுல்லா, அர்பன் பாங்க் தலைவர் சடையப்பன், தம்பி சுப்பிரமணி,  நல்லூர் சக்திவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.