வேப்பூரில் திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி மாயம்.

வேப்பூர்  அருகே  பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி மாயமானார்.

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஏ,சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லவேல் மகள் தமிழ்செல்வி (வயது 17),  இவர் வேப்பூர் அருகிலுள்ள கண்டபங்குறிச்சி பவானி கல்லூரியில்  பிஎஸ்சி, முதலாமாண்டு படித்து வருகிறார்,  இவர் பனிரென்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு  செய்தார், கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதால் பெற்றோர் ஊருக்கு  அருகாமையில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டனர்.

 

தற்போது வேறு ஒருவர் வந்து பெண் கேட்டு சென்றுள்ளார் அவர்களுக்கு சம்மதம் தெரிவித்த செல்லவேல் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் இதை பிடிக்காத தமிழ் செல்வி கடந்த 29 ந் தேதி கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் மீண்டும்  வீட்டிற்கு வரவில்லை கடந்த மூன்று நாட்களாக உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செல்லவேல் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.