அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம்

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பர்கூர் போலீசார் மற்றும் அந்தியூர் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பர்கூர் கிராமம் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பேசிய குணசேகரன் வன உரிமை சட்டம் 2006 இன் படி வன சிறு மகசூல் சேகரிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்ததுவதும் அபராதம் விதிப்பதும் சட்டப்படி பெற்ற உரிமைகளை வனத்துறை பறிப்பதும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

காலம் காலமாக பழங்குடியின மக்களின் பயன்பாட்டில் இருக்கும் வாழ்வாதாரமான சாகுபடி நிலங்களை போலி வருவாய் ஆவணங்களை உருவாக்கி திருத்தம் செய்து மோசடி செய்வதன்மூலம் இவர்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்பட்டு நில அபகரிப்பு செயலுக்கு வருவாய்த்துறை துணை போகிறது. மலைவாழ் மக்களின் இந்த போராட்டத்தை அறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த அந்தியூர் வட்டாட்சியர் மாலதியிடம் மலைவாழ்மக்கள் சார்பில் பேசிய குணசேகரன், மாவோயிஸ்டுகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போதே இதுபோன்று உருவாகுவதாகவும், நானே ஒரு மாவோயிஸ்ட் தான் என்னை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள். 

 

நீங்கள் பணி செய்யவில்லை என்றால் உங்களை கழுத்தை நெரித்து கொல்ல தோன்றும் என்றும் பரபரப்பாக குணசேகரன் பேசினார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த குணசேகரன்: பர்கூர் மலைப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமைச் சட்டம் உட்பட பல சட்டங்கள் இருந்தும் இதனை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே சட்டத்தை பாதுகாக்க தவறும் செயல் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடை பெற்று வருகிறது. அந்தியூர் அருகே பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் உயிர், உண்மை வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் எஸ்.இ.எஸ்.டி  வன்கொடுமை சட்டத்தின் கீழ் முகாந்திரம் இருந்து புகார் மனு கொடுத்தும்  பர்கூர் காவல் ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் மிகுந்த கால தாமதத்திற்கு பிறகே வழக்கு பதிவு செய்ததால் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எங்களின் இந்த மனுக்கள் மீது அந்தியூர் வட்டாட்சியர் மாலதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து கலைந்து செல்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மனித உரிமை ஆணையத்தை நாடுவதாகவும் மேலும் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் சார்பில் பேசிய குணசேகரன் தெரிவித்தார். அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous Post Next Post