மயிலாடுதுறையில் இல்லந்தோறும் இனிய திருவாசகம் விழா

மயிலாடுதுறையில் இல்லந்தோறும் இனிய திருவாசகம் விழாமயிலாடுதுறைக் ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றத்தின் சார்பில் இல்லந்தோறும் இனிய திருவாசகம் என்ற திட்டத்தின் இரண்டாம்  விழா மயிலாடுதுறை டவுன் அண்ணா  நகரில் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு இல்லத்திற்கும் ஒரு திருவாசக புத்தகத்தை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் இலவசமாக வழங்கி வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் இரண்டாம்  விழா மயிலாடுதுறை அண்ணா  நகரில்  மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர்  அ. வளவன்  விழாவை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் அண்ணா  நகர் முழுவதும் உள்ள வீடுகளில் திருவாசகம் புத்தகம் வழங்கப்பட்டது.  திட்டத்திற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் செய்திருந்தார்.