காதலனுடன் இருந்த பெண்ணை கத்தி முனையில் சீரழித்த அரக்கர்கள்: உயிருக்கு ஆபத்தான் நிலையில் சிகிச்சை!!

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண்ணை 3 பேர் நாசம் செய்துள்ள சம்பவம் தமிழகத்தின் வடமாவட்ட்டங்களில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.


வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார்.  24 வயதான அந்த இளம்பெண், தன்னுடைய காதலனுடன் இந்த கோட்டை பகுதியில் உட்கார்ந்து   பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காதலர்களை சுற்றி கிண்டல் கேலி செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை தூக்கி சென்று கத்திமுனையில் மாறி மாறி கற்பழித்தனர். இறுதியில் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பறித்து கொண்டு 3 பேரும் தப்பிவிட்டனர். அந்த பெண் இப்போது உயிருக்கு ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


பெண்ணை சீரழித்து தப்பியோடிய 3 பேரில் ஒருவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். வேலூரின் மையப்பகுதியில், எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான, வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியிலேயே உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களை மட்டும் இல்லாமல் வட தமிழகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த இடம் ஏற்கனவே வேலூர்  கலெக்டர் அலுவலகம் செயல்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.