வாட்ஸ் அப்புக்கு வந்த சோதனை: டவுன்லோடு ஆகாமல் தவித்த பயனாளிகள்!!

உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்ப்பட்டதால் பயனாளர்கள் அவதிப்பட்டனர்.


சிக்கல் குறித்து வாட்ஸப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை; #Whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 3வது இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது


சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாட்ஸ் – அப்பில் இமேஜ், வீடியோ அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதை டவுன்லோடு செய்ய இயலாமல் பலரும் தவித்தனர். 


இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்டநேரம் முயற்சித்தும் அவற்றை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். உலக அளவிலும் இதேநிலை தான் என்று கூறப்படுகிறது. இதுவே இன்று மாலையில், சமூகவலைதளங்களில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது