குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதனை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை கண்டித்தும் திருப்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை தவறாக சித்தரித்து எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்தும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்காக வாபஸ் பெறக் கூடாது என வலியுறுத்தியும் திருப்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருத்தப்பட்ட உரிமை சட்டத்திற்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறும் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.