கார் - வேன் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர் பலி: 20 பேர் படுகாயம்

 


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு செங் கட்டாம்பட்டி அருகே தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு  பேருந்தில் சுற்றுலா வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த24 பேர் வந்துள்ளனர். இது போல திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சாத்திரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் காரில் சபரிமலை சென்றுவிட்டு  திரும்பும் வழியில் வத்தலகுண்டு அருகே உள்ள செங்கட்டாம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஐயப்பன் பக்தர்கள் வந்த காரும், திருச்செங்கோட்டில்  இருந்து சுற்றுலா வந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல்லிகா, மதன், மணி, தங்கராஜ்,சரோஜா  உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.  விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு உடனடியாக  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும்


காயம் அடைந்தவர்களை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துபட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.