சுங்கச்சாவடியில் பணம் செலுத்த மறுத்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ : வாக்குவாதம் - பரபரப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காரில் மணவாசி சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளார்.அப்போது மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் எம்எல்ஏ அடையாள அட்டையை பாலபாரதி காட்டியுள்ளார்.


 அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதி மறுத்து கட்டணம் செலுத்தவேண்டும் என கூறி உள்ளனர்.ஆனால்  பாலபாரதி சுங்கம்  செலுத்த மறுத்துள்ளார். இதனால் சுங்கச்சாவடி ஊழியர் களுக்கும் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


 30 நிமிடம் வாக்குவாதத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.


இதுகுறித்து தகவலறிந்த சுங்கச்சாவடி அருகே இருந்த புறக்காவல் நிலைய போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாலபாரதி அங்கிருந்து புறப்பட்டார. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும், அவரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது முன்னாள் எம்.எல்.ஏ.க்கான அடையாள அட்டை காண்பித்தபோது பணம் கட்டி செல்ல வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஊழியர்கள் என்னை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காரின் முன்பு நின்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.


ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சுங்கம் கட்ட மறுத்து வாக்குவாதம் செய்ததாக தெரிவித்தனர். முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சுங்க விலக்கு இல்லை என்றும் அவர்கள் கூறினர்.


Previous Post Next Post