பொங்கல் நாளில் இரண்டு பெண் குழந்தைகள் மர்ம மரணம்

  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோயில் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ்.


இவருடைய மூத்த மகள் ஜெயஸ்ரீ (5) இரண்டாவது மகள் தனுஸ்ரீ (3) இருவரும் நேற்று  முந்தினம் இரவு உப்புமா சாப்பிட்டுள்ளனர். காலையில் வழக்கம்போல குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது காலை 11 மணி அளவில் மூத்த மகள் ஜெயஸ்ரீக்கு டீ கொடுத்துள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் ஜெயஸ்ரீ.


குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். சிறிது நேரத்தில் மருத்துவர்கள் பரிசோதனை செய்த குழந்தை ஜெயஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


மற்றொரு குழந்தை தனுஸ்ரீ ஒரு மணி நேரம் கழித்து  இறந்துள்ளது. குழந்தைகள் இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதாரத் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.


நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவால் தான் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரண தாள் குழந்தை இறந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பொங்கல் திருநாளில் ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தை இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.