கள்ளக்காதல் மோகம் கண்ணை மறைத்தது: மதுவை குடிக்க வைத்து அடித்து துவைத்த கொடூர தாய்!! ரத்தவாந்தி எடுத்த இளம் பிஞ்சு

தவறான உறவுக்கு இடையூறாக இருந்த பெண்குழந்தைக்கு, பெற்ற தாயே வாயில் மதுவை ஊற்றி கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியை சேர்ந்த நந்தினி, கணவர் மாதேஷ் உடன் கருத்துவேறுபாடு காரணமாக, தனது மூன்றரை வயது மகள் நயனாஸ்ரீயுடன் தனித்து வசித்து வந்துள்ளார்.


 இந்நிலையில், அதே பகுதியை சேரந்த இளைஞர் அசோகனுடன், ஏற்பட்ட நட்பு எல்லை மீறியதாக கூறப்படுகிறது. அசோகன்தனிமையில் இருந்த நந்தினியை மதுபோதை பழக்கத்திற்கு அசோகன் அடிமையாக்கியுள்ளார்.


 இந்நிலையில் வீட்டில் நண்பர் அசோகனுடன் மது அருந்திய நந்தினிக்கு போதை தலைக்கேறியுள்ளது. அப்போது தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த மகள் நயனாஸ்ரீ மீதான ஆத்திரத்தில், மகளுக்கு தானே மதுவை ஊற்றி கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து, கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளார். 


குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்.


  போதையில் இருந்த நந்தினியிடமிருந்து குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தை நயனாஸ்ரீ ரத்தவாந்தி எடுத்ததால், மேல்சிகிச்சைக்காக ஒசூர் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். 


அங்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் நயனாஸ்ரீ, மிகுந்த வலிகளுடன் அம்மா, அம்மாவென்று முணகிகொண்டிருந்தது, மருத்துவர்களை மட்டுமல்லாது பொதுமக்களின் கண்களையும் குளமாக்கியது.இதற்கு காரணமான தாய் நந்தினி, ஆண் நண்பர் அசோகன் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.