அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம் தயாராகுது... முகூர்த்தக்கால் நட்டாச்சு!

தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் எதிர்பார்க்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுகிறது. 


மதுரை,அலங்காநல்லூர்  உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய்,  சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


 இன்று காலை 7 மணிக்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் எம்.எல்.ஏ மற்றும் விழா கமிட்டியினர் முன்னிலையில் முத்தாலம்மன் கோவில் அருகில் நடைபெற்ற முகூத்த கால் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக அங்குள்ள காளியம்மன், முத்தாலம்மன் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.


முகூர்த்தகால் ஊன்றும் கொடிமரத்திற்கு சந்தனம், விபூதி, பால், கோமியம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து மூர்த்தகால் ஊண்டபட்டது.


இன்று அலங்காநல்லூரில் மாடுகளுக்கான அனுமதிச்சீட்டு பதிவு நடைபெறுகிறது. இதில் ஏராளமான மாட்டின் உரிமையாளர் வந்திருக்கும் நிலையில் 650 மாடுகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப் படுகிறது.


இதில்மாடுகள் வைத்திருக்கும் ஒரு சில பெண்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை எனவும் மாடுகளுக்கு முறையாக அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை என மாவட்ட கலெக்டரிடம் பெண்கள்  முறையிட்டனர். 


அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்  என உறுதியளித்ததன் அடிப்படையில் கூட்டத்தைக் களைத்து சென்றனர்.


Previous Post Next Post