ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல் துறைக்கும் பொது மக்கள் சிறப்பான பாரட்டு!

ஈரோட்டில் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல் துறைக்கும் பொது மக்கள் சிறப்பான பாரட்டை தெரிவித்தனர்.

 


 

ஈரோட்டில் 2 ம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் 300 காளைகள் , 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு சிறந்த வீரராக மதுரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தேர்வு. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில்  2 ம்  ஆண்டாக   ஈரோடு பெருந்துறை ரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கருப்பண்ணன் , ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். 

 

ஜல்லிக்கட்டு போட்டியில்  300 வீரர்கள் மாடுபிடி வீர்ர்களும்  350 மாடுகளும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.முன்னதாக மாடுபிடி வீர்ர்கள் போட்டியின் போது மாடுகளுக்கு எவ்வித தீங்குகளும் ஏற்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் , சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மதுரை யைச்  சேர்ந்த கார்த்திக்கு என்பவர் சிறந்த வீராக  இரு சக்கர வாகனம்  ( பல்சர் )  பரிசளிக்கப்பட்டது.சிறந்த காளையாக  சிவகங்கைச் சேர்ந்த தவமணி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டு இருசக்கர வாகனம் (ஸ்கூட்டி )   பரிசாக வழங்கப்பட்டது.ஈரோடு ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பாக செய்திருந்தது.

Previous Post Next Post