ரெப்கோ வங்கியின் இலவச மருத்துவ முகாம்


ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் ரூபாய் ஆயிரம் கோடி வர்த்தகத்தினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்


 -மேலாண்மை இயக்குனர் ஆர் எஸ் இசபெல்லா தொடங்கி வைத்தார்


மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வழங்கிய தொகை ரூபாய் ஆயிரம் கோடி இலக்கு அடைந்ததை  முன்னிட்டு நேற்று (09.01.2020) அன்று தி நகர் கிளையில் ரெப்கோ நுண்கடன் நிறுவனமும் பேமிலி பிளானிங் அசோசியேசன் ஆப் இந்தியாவும் இணைந்து தி நகர் கிளையில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது 


முகாமினை நிறுவன மேலாண்மை இயக்குனர்  ஆர்எஸ் இசபெல்லா துவக்கி வைத்தார். இயக்குனர் பாலசுப்பிரமணியன்  முன்னிலை வகித்தார். இம்முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவன மேலாண்மை இயக்குனர்  ஆர் எஸ் இசபெல்லா:-


ரெப்கோ நுண்கடன் நிறுவனம், ரெப்கோ வங்கியினால் 27.06.2007-ம் ஆண்டு, சிறுதொழில் வளர்ச்சிகாக உருவாக்கப்பட்டது, இந்நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகவும் NBFC - MF என 2013-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்று தமிழ்நாட்டில் நுண்கடன் நிதி நிறுவனமாக
பதிவு பெற்று மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு சுயதொழில் புரியவும், சிறு தொழில் வளாச்சிக்காகவும் நுண்கடனை வழங்கி வருகிறது.


இந்நிறுவனமானது தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் தற்பொழுது 90 கிளைகளுடன் 35 மாவட்டங்களில் தனது சேவையை செய்து வருகிறது.
இந்நிறுவனம் மூலம் 2007 ஆண்டு முதல் டிசம்பர் 2019-ம் ஆண்டு வரை 12 இலட்சம் மகளிர் சுய உதவி குழு பயனாளிகள் நுண்கடன் பெற்றுள்ளனர். மேலும், சுமார் ரூ.4000 கோடி வரை இதுவரை பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், மேற்படி பணிகளை மேற்கொள்ள இந்நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் சுமார் 630
பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 400-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெண்கள்
பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிறுவனம் வாயிலாக கடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல் இங்கு மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. உறுப்பினர் பயிற்சி, ஊக்குநர் -
பிரதிநிதி பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி, கள பயிற்சி, பணியாளர்களுக்கு புத்தாக பயிற்சி போன்ற தங்களது திறமையை வளர்த்துகொள்ளும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


மகளிர் சுய உதவி குழு பயனாளிகள் தாங்கள் வாங்கும் நுண்கடன் தொகையை பல்வேறு சுயதொழில் புரிவதற்கு பயன்படுத்தி வருகின்றனர், கறவைமாடு வாங்க, பால் வணிகம் தொடங்க, உணவு பண்டங்கள் உற்பத்தி செய்ய, மகளிருக்கான நாப்கின் தயாரிப்பு, ஊறுகாய், ஊதுவத்தி
செய்தல், தோல் பொருட்கள், பழ வணிகம், காய்கறி வணிகம், தையல் கலை, மெழுகுவர்த்தி, ஆடு
- மாடு வளர்த்தல், சிற்றுண்டி நிலையம் தொடங்குதல், கைவினை பொருட்கள், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், மீன் விற்பனை, பாக்குமட்டை தயாரிப்பு, கொலுசு தயாரிப்பு,
காளான் விற்பனை, அரிசி வியாபாரம், மாவு விற்பனை போன்ற தொழில்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிறுவனத்தின் மூலம் 18 வயது கடந்த 55 வயது வரை உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் அனைவரையும் பயனாளிகளாக இணைத்து கொள்ளப்படுகிறார்கள். மேலும், மேற்படி ஒவ்வொரு மகளிர் குழு உறுப்பினர் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவராகவும், சுயதொழில் புரிவதில் ஆர்வமும், வருமானம் ஈட்டகூடிய தொழில் புரியும் மகளிருக்கு நுண்கடன்
வழங்கப்படுகிறது. மேற்படி சுய உதவி குழுவில் குறைந்தது  5 முதல் 20 வரை பயனாளிகள் இணைந்து செயல்பட்டு நுண்கடன் பெற்று வருகின்றனர்.


இந்நிறுவனம் வாயிலாக அதிகபட்சமாக ரூ.1,25,000/-வரை மகளிர் சுய உதவி குழு
நுண்கடன் வழங்கப்படும். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நான் (ஆர் எஸ் இசபெல்லா)  மார்ச் 2016ல் பொறுப்பேற்ற பின்னர் கிட்டத்தட்ட ரூபாய் 300 கோடி வணிகமாக இருந்த இந்நிறுவனத்தை தற்போது ரெப்கோ கடன் நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வழங்கிய தொகை ரூபாய் ஆயிரம் கோடி வர்த்தகத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.


இந்நிறுவனம் சுமார் 630 பணியாளர்களை கொண்டு நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு ரூபாய் ஆயிரத்து 300 கோடி இலக்குடன் மற்ற மாநிலங்களில் முன் கடன் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது


ரெப்கோ நுன்கடன் நிறுவனம் அதிக அளவில் மாநிலத்தில் மகளிர் சுய குழு பயனாளிகளுக்கு நுன்கடன் இணைப்பை வழங்கியமைக்காக நிறுவனத்தின் விருதினை கடந்த 3 ஆண்டுகளாகவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் விருதினை ஐந்து முறையும் 2018ம் ஆண்டு அகில இந்திய அளவில் விருதினை பெற்ற இந்நிறுவனம் பல்வேறு சாதனைகளை பெற்று தமிழ்நாட்டில் மிகப்பெரும் நுண்கடன் நிறுவனமாக செயலாற்றி வருகிறது " 


எனவே நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வழங்கிய தொகை ரூபாய் ஆயிரம் கோடி இலக்கு அடைந்ததை  முன்னிட்டு இன்று ( 09.01. 2020 )தி நகர் கிளையில் ரெப்கோ நுண்கடன் நிறுவனமும் பேமிலி பிளானிங் அசோசியேசன் ஆப் இந்தியாவும் இணைந்து தி நகர் கிளையில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது,  மருத்துவ முகாம் மேலும் மற்ற கிளைகளிலும் சென்னையிலும் நடைபெற உள்ளது" என்றார்


முகாமினை நிறுவன மேலாண்மை இயக்குனர்  ஆர்எஸ் இசபெல்லா துவக்கி வைத்தார், இயக்குனர் பாலசுப்பிரமணியன்  முன்னிலை வகித்தார், இம்முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.