அரசு பள்ளியில் ஆங்கில வாசிப்புத்திறனை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர்

செந்துறை அருகே திருநூத்துப்பட்டி அரசு பள்ளியில் ஆங்கில வாசிப்புத்திறனை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை அருகே திருநூத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் ஆங்கில வாசிப்புத் திறனை கேள்விப்பட்ட திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியனும்,பள்ளி துணை ஆய்வாளர் சிவக்குமார்  ஆகியோர் முன்னறிப்புன்றி தீடீர் ஆய்வு மேற்க்கொண்டனர். அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் திறன்,வாசிப்புத் திறன்,எழுதும் திறன்,மாணவர்கள் வருகைப் பதிவேடு உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து தொலைக்காட்டி பெட்டி,கணிணி.மடிக்கணிணி,ஆங்கில அகராதி பயன்பாடு,அறிவியல் மற்றும் கணக்கு உபகரணப்பெட்டி உள்ளிட்டவற்றின் பயன்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பொனடிக்ஸ் முறை மூலம்  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் வாசித்ததை கண்டு வியந்து பாராட்டி பரிசுகளை வழங்கினார். தலைமையாசிரியர் பாண்டியன்,இடைநிலை ஆசிரியர் அந்தோணி கஸ்பார் ஆகியோரையும் பாராட்டினார். மாணவர்களின் தமிழ்,ஆங்கில வாசிப்புத்திறனை மேம்படுத்த தினமும் பள்ளிகளில் பத்திரிக்கைகள் வாங்கி காலையில் அன்றாட தமிழ் தலைப்பு செய்திகள் வாசிக்கவும்,நூலகத்தில் தமிழ்,ஆங்கில பத்திரிக்கையை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி  இதே பள்ளியில் ஆய்வு செய்துள்ளார்.