பள்ளி மாணவி மீது லாரி மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி

 

 

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகள் ராதிகா இவர் பொடையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவர் இன்று மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் தன் தோழியுடன் (எழிலரசி) தனித்தனியாக வரும்பொழுது தொழுதூரில் இருந்து  உளுந்தூர்பேட்டை நோக்கி நெல் அறுவடை செய்யும்  இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் சென்றது அப்போது ராதிகா   மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ராதிகா பலியானார் எழிலரசி லேசான காயத்துடன் உயிர் தப்பினர் இதனால் கல்லூர் கிராம மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.