கருத்தம்மா படபானியில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்ற ஒத்தவீடு செல்லம்மா


தேனி மாவட்டம். ஆண்டிபட்டி அருகே உள்ள
ஒத்தவீடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். 


இந்த நிலையில் கவிதாவிற்கு கடந்த 6 நாட்களுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையை கவிதா, அவரது மாமியார் செல்லம்மாள் ஆகியோர் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவி. ராஜதானி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் கவிதா, செல்லம்மாள் ஆகியோரை போலீஸார் கைது செய்து .விசாரித்து வருகின்றனர்