பெற்ற தாயின் கண்முன்னே கிணற்றில் விழுந்து 3 பெண் குழந்தைகள் பலி

பெற்ற தாயின் கண்முண்ணே மூன்று பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து பலி.


 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மலையனூர் கிராமத்திற்கு தனது உறவினர் வீட்டு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு


கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன் இவர் பெங்களூரில் பெட்ரோல் பங்கில்  பணியாற்றி வருகிறார்  இந்நிலையில்
 தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் அனுப்பி வைத்துள்ளார்.


 இந்நிலையில் மலையனூர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றிற்கு  துணி துவைப்பதற்காக தனது மூன்று மகள்களையும் அழைத்துச் சென்றுள்ளார் அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த போது எட்டாம் வகுப்பு படித்து வரும் சுவேதா ஐந்தாம்வகுப்பு படித்துவரும் நிவேதா மூன்றாம் வகுப்பு படித்து வரும் சுஜாதா மூன்று குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியுள்ளது.


 இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் தாயார் ஸ்டெல்லாவின் அலறல் சத்தம் கேட்டு  அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து  மூன்று குழந்தைகளின் உடலையும் மீட்டனர். 


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த   இன்ஸ்பெக்டர் கவிதா 
சப் இன்ஸ்பெக்டர்  ரவிச்சந்திரன்  திட்டக்குடி காவல்துனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


 பெற்ற தாயின் கன்முன்னே மூன்று  குழந்தைகளும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது