பல்லாவரம் வாரசந்தை இரண்டு வாரங்கள் மூடப்பட்டது

தமிழக அரசின் உத்தரவின் பேரில் பல்லாவரம் வாரசந்தை இரண்டு வாரங்கள் மூடப்பட்டது இதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்


சென்னை மீனபாக்கம் அடுத்த பல்லாவரம் பிரதான இடத்தில் இயங்கி வரும் வார சந்தை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அத்தனையும் கிடக்கும் ஒரு இடமாக இருக்கிறது. 


ஒவ்வொரு வாரமும் சென்னையில் பல இடங்களில் இருந்து மக்கள் வார சந்தைக்கு வந்து பொருட்களை வாங்குவது வழக்கம்,கடைகளில் விற்பனை செய்யப்படுவதை விட இங்கு மளிகைப் பொருட்கள் பல நூறு ரூபாய்கள் குறைவாக கிடைப்பதாக அதிக அளவில் மக்கள் சந்தைக்கு வருகின்றனர், மாதாந்திர தவணையில் பொருட்களை வாங்க முடியாத நடுத்தர குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான பொருட்களை செகண்ட்ஸ் சேல்ஸில் வாங்கி செல்கின்றனர். கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், டிவி, டிவிடி பிளேயர், நாற்காலிகள், கட்டில் என எல்லாம் சந்தையில் கிடைக்கிறது. 


தற்பொழுது கொரோனா எதிரொலியாக தமிழக அரசு மார்ச் 31,வரை வார சந்தைகள் நடக்கக்கூடாது என்று உத்தரவிட்டதை அடுத்து இன்றும் அடுத்த வாரமும் சந்தை நடக்காது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்


இந்த அறிவிப்பை பற்றி தெரியாத மக்கள் சந்தைக்கு வந்து ஏமாந்து செல்கின்றனர் ஆயினும் அரசு நமது நன்மைக்காக தான் உத்தரவிட்டு இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்


வெள்ளிக்கிழமை ஆனால் மக்கள் கூட்டத்தால் திருவிழா போல் காட்சியளிக்கும் சந்தை தற்போது வெரிச்சோடி காணப்படுகிறது


இதனால் சிறுகுறு தொழில் செய்யும் வியாபாரிகள் நஷ்டப்பட்டாலும், கொரோனாவை பரவாமல் தடுக்க நாங்களும் உதவுகின்றோம் என்று முன்வந்துள்ளனர்.


Previous Post Next Post