தூங்கா நகரத்தை தூங்கிய நகரமாகிய கொரானா வைரஸ்


மதுரையின் மற்றொரு பெயர் தூங்கா நகரம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் மதுரையின் மற்றொரு பெயராக தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது இந்த தூங்கா நகரத்தில் வெளியூர் வெளிநாடு மக்கள் என்னேரமும் எந்த பொருள் வாங்க வேண்டுமானாலும் எந்த ஊர் செல்ல வேண்டுமானாலும் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படும். அப்படிப்பட்ட தூங்கா நகரத்தில் இன்று கொரானா வைரஸின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மக்களோடு சுய ஊரடங்கு அறிவிப்புக்கு ஆதரவளித்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல்  தூங்கா நகரத்தை தூங்கும் நகரமாக்கி கொரானாவை விரட்டி அடிப்பதில் மதுரை பொது மக்கள் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் ரோட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் இன்று திருப்பரங்குன்றம் ரோட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் செல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.