கொரோனா நிவாரணமாக 1500 பேருக்கு இலவச உணவு பொருட்கள்: சேவ் அமைப்பு வழங்க்கியது

சேவ் அமைப்பானது திருப்பூர் பகுதியில் வெளி மாநிலத் தொழிலாளர்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்காக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றது.


கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவினால் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு 1500 பேர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதனை 'சேவ்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆ. அலோசியஸ் அவர்கள் தெரிவித்தார்.


அவர்களுக்கு அரிசி, கோதுமை மாவு, பருப்பு, எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம், சோயா பீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களை அவர்களது இடத்திற்கே சென்று, எந்தவித கூட்ட நெருக்கடி இல்லாமல், அரசின் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்பட்டது.


இந்த சேவையின் மூலம் விஜயாபுரம், சாமுண்டிபுரம், வளையன்காடு, கோல்டன் நகர், செட்டிபாளையம், சந்திராபுரம், சிட்கோ , முதலிபாளையம், கோவில்வழி, ஐஸ்வர்யா நகர், தென்னம்பாளையம், மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஒரிசா, உத்திரப் பிரதேசம், அஸ்ஸாம், பீகாரைச் சார்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெற்று உள்ளனர். சேவ் அமைப்பானது வருகின்ற நாட்களில் 2000 நபர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதியை கோரியுள்ளது என்பதை சேவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆ. அலோசியஸ் அவர்கள் தெரிவித்தார்.


Previous Post Next Post