வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி.,  திருப்பூர் மாவட்ட குழு சார்பில் பூலுவபட்டி இந்திரா நகரில் வேலையின்றி தவிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி வழங்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி.,  மாவட்ட பொது செயலாளர்  என்.சேகர், மோட்டார் சங்க பொதுசெயலாளர்  சசிகுமார், சி.பி.ஐ., மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ரவி,   2ம் மண்டல துனை செயலாளர் எஸ்.விஜய்,  அருண் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.