ரூ.2000 மதிப்புள்ள மருந்து, ரூ.380க்கு வீடு தேடி வந்து வழங்கிய சேவாபாரதி அமைப்பினர்

திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் சின்னான் நகர் பகுதியில் வசித்து  தினசரி கூலி  தொழிலாளிகள் ரங்கசாமி, அவரது மனைவி சுந்தராம்பாள் தம்பதியினர் தங்களுக்கு மருந்துப்பொருட்கள் தேவை என *சேவாபாரதி முகாம் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.   


அதனடிப்படையில் சேவா பாரதி அமைப்பினர்  சுமார் ரூ.2000  மதிப்புடைய மருந்து, மாத்திரைகள் அனைத்தும் பாரதப்பிரதமர்  தொடங்கி உள்ள ஜன் ஒளஷாதி (மக்கள் மருந்தகம்-இல், மொத்தமாக ரூ.380 க்கு வாங்கப்பட்டது.


இந்த மருந்துகளை மேற்படி கூலி தொழிலாளி இல்லத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டது 


மேலும், நாம் அறிவுறுத்தியதன்படி மங்கலம் சாலை, ஆண்டிபாளையத்திலுள்ள மருந்துக்கடை விலாசம் தரப்பட்டு இனி அங்கேயே வாங்குவதாக உறுதி கூறினர்.