தனிமைப்படுத்தப்பட்ட 55 பேருக்கு நோய்த்தொற்று இல்லை: திருப்பூர் மக்களுக்கு சற்றே ஆறுதல்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த இரு நாட்களில் தடாலடியாக உயர்ந்தது. 12 ந்தேதி 35 பேருக்கும், 13 ந்தேதி 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 


இந்த இரண்டு நாட்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 10 வயதுக்குட்ப்பட்ட  குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் 8 என்ற நிலையில் இருந்தது. ஒரு வயது குழந்தை ஒருவர், மூன்று வயதில் இருவர், நான்கு வயதில் இருவர் என சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் கலக்கமடைந்தனர். 


இதுமட்டுமன்றி, அவிநாசி, குமரானந்தபுரம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட பகுதிகள் ஓரிரு நாட்களில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் ஏற்ப்பட்டது.


(படம்: அவிநாசி-மங்கலம் ரோட்டில் அவிநாசி தனிமைப்படுத்துவதற்காக ரோடு அடைக்கப்பட்டுள்ளது)


-------------------------------------------------------------------------------------------------------


இந்த நிலையில், திருப்பூர் பொதுமக்களுக்கு சற்றே நிம்மதியடைய வைக்கும் விதமாக இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1356 ஆக இருந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும் சட்டென குறைந்துள்ளது. தற்போது இன்றைய நிலையில் 55 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதில் இருந்து எந்த வித நோய் அறிகுறியும் இல்லாத நிலையில், தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் புதிதாக 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆக மொத்தம் 847 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 78ஆகவே தொடர்கிறது. 


 


Previous Post Next Post