68,519 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியது:


டெஸ்ட் செய்யப்பட்ட சேம்பிள்19,255, தனிநபர் டெஸ்ட் எண்ணிக்கை 15502. இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்ற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் எண்ணிக்கை 1,204 ஆனது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், ஆண்கள் 15 பேர். பெண்கள் 16 பேர். அரசு கண்காணிப்பில் 135 பேர் இருக்கிறார்கள். வீட்டுக்கண்காணிப்பில் 28,711 பேர் உள்ளனர்.


68,519 பேருக்கு கண்காணிப்பு முடிந்தது. கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. Severe acute respiratory illness (SARI) சாம்பிள்களில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 


இன்று 81 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 


மாவட்ட வாரியாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவரம்: 


திண்டுக்கல் 9


சென்னை 5


தஞ்சை 4


தென்காசி 3


 மதுரை 2 


ராம்நாடு 2


நாகை 2


சேலம் 1


சிவகங்கை 1


கன்னியாகுமரி 1


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சட்டென குறைந்து உள்ளது. இருந்த போதிலும் இன்னும் சில நாட்கள் பார்த்த பின்னர் தான் தொற்று குறைகிறதா அல்லது பரவுகிறதா என உறுதி செய்ய முடியும். 


மேலும் கண்காணிப்பில் இருந்த 68,519 பேர் கொரோனா தொற்று ஏதும் இல்லாமல் கண்காணிப்பு முடிந்து உள்ளது தமிழக மக்களை சற்று நிம்மதியடையச்செய்துள்ளது. 


 


இன்னும் 28,711 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும், 135 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கையில் யாரும் சேராமல் இருக்கும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.